கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து கடலூர் மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட கோரிக்கை

13 views
1 min read
cdl

கடலூர் மாவட்ட காவிரி டெல்டா கடை பகுதி விவசாயிகளுக்கு பாசனத்திற்கு, கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அச்சங்க மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் வெளியிட்டுள்ள அறிக்கை: கடலூர் மாவட்ட காவிரி டெல்டா கடை, மடை பாசனப் பகுதிக்கு குறுவை சாகுபடிக்கு வீராணம் ஏரியிலிருந்து கீழணையில் இருந்து வடக்கு ராஜன் வாய்க்காலுக்கு தண்ணீரை திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜன் வாய்க்கால், நழம்புத்தூர் இரண்டாம் நம்பர் வாய்க்கால் வழியாக முள்ளங்குடி, நளம்புத்தூர், ஆலம்பாடி, அத்திப்பட்டு ஆகிய கிராமங்களில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். இங்கு பயிரிடப்பட்ட பயிர்கள் நிலத்தடிநீர் உப்பாக மாறியதால் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

எனவே பயிர்களை காப்பாற்ற ராஜன் வாய்க்காலில் தண்ணீரை திறந்து விட வேண்டும். மேலும்  பூதங்குடி, அள்ளுர், சாத்தமங்கலம், பரிபூரனநத்தம், வாழக்கொல்லை,  ஓடாக்கநல்லூர், வடபாக்கம், வாக்கூர் பூந்தோட்டம், பாளையம்சேத்தங்குடி, ஒரத்தூர், புதுப்பேட்டை, அய்யனூர் அக்கிரமங்களம் ஆகிய பகுதிகளுக்கும் ஏரியில் இருந்து குறுவை பாசனத்திற்கு  உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும். வீராணம் ஏரியும் ராஜன் வாய்க்காலில் இருந்து தண்ணீரை திறந்துவிடுவதன் மூலம் குறுவை சாகுபடி துவங்குவும் உளுந்து பச்சைப்பயிறு கொள்ளு போன்ற பயிர்களை பயிரிட முடியும் குறுவை சம்பா நவரை என முப்பட்டம் பயிரிட்ட விவசாயிகள்கடந்த பல ஆண்டுகளாக சம்பா மட்டும் சாகுபடி செய்யும் நிலை உள்ளது. 

ஜூன் 12 மேட்டூரில் இந்த ஆண்டு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ள சூழ்நிலையில் தண்ணீரை திறப்பதன் மூலமாக மோட்டார் பாசன பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் ஆடுமாடுகள் குடிப்பதற்கும் ஏதுவாக அமையும்எனவே காவிரி பாசனப் பகுதிக்கு வீராணம் ஏரியில் இருந்தும் கீழணை இருந்தும் தண்ணீரை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையில் கோ.மாதவன் தெரிவித்துள்ளார்.

TAGS
Cuddalore Veeranam

Leave a Reply