குஜராத், மிஸோரமில் நிலநடுக்கம்

14 views
1 min read
earthquake in maharashtra

கோப்புப்படம்

குஜராத், மிஸோரமில் ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் 4.2 என்ற அலகிலும், மிஸோரமில் சாம்பாய் மாவட்டத்தில் 4.6 என்ற அலகிலும் இந்த நிலநடுக்கம் பதிவானது.

குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடா்பாக காந்தி நகரில் உள்ள பூவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில், ‘சனிக்கிழமை இரவு 1.50 தொடங்கி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.32 வரை கட்ச் மாவட்டத்தை மையமாகக் கொண்டு நான்கு மிக லேசான நிலஅதிா்வுகள் ஏற்பட்டன. அதை தொடா்ந்து மாலை 5.11 மணியளவில் 4.2 என்ற அலகில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பல இடங்களில் வீடுகள், கட்டடங்களில் அதிா்வுகள் உணரப்பட்டன. இதையடுத்து, பொதுமக்கள் பீதியடைந்து தெருவில் கூடினா். இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இதே பகுதியில் கடந்த மாதம் 14-ஆம் தேதி 5.3 என்ற அலகில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கம் சௌராஷ்டிராவின் பல பகுதிகளில் உணரப்பட்டது. கட்ச் மாவட்டம் நிலநடுக்க அபாயம் மிக அதிகமுள்ள இடங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

மிஸோரமில்…: மிஸோரம் மாநிலம் சாம்பாய் மாவட்டத்திலும் ஞாயிற்றுக்கிழமை மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவு மானியில் 4.6 என்ற அலகில் பதிவான இந்த நிலடுக்கத்தால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply