குடல் அறுவை சிகிச்சை மருத்துவர் எஸ்.எம். சந்திரமோகன் மறைவு: ஸ்டாலின் இரங்கல்

15 views
1 min read

 

குடல் அறுவை சிகிச்சை மருத்துவத்தில் புகழ்பெற்றவரான டாக்டர் எஸ்.எம். சந்திரமோகன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் வெளியிட்டுள்ளார்.

இரங்கல் செய்தியில், குடல் அறுவை சிகிச்சை மருத்துவத்தில் புகழ்பெற்றவரான டாக்டர் எஸ்.எம்.சந்திரமோகன் அவர்களின் மரணம் அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கிறது.

மருத்துவத் துறைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையிலும், இராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும் நோயாளிகளின் மீது தனி அக்கறை செலுத்தி அவர்கள் முழு நலன் பெறப் பாடுபட்ட டாக்டர் சந்திரமோகன் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது பிரிவால் வாடும்  குடும்பத்தார் – உறவினர்கள் – நண்பர்கள் – மருத்துவத்துறையினர் அனைவருக்கும் திமுகவினர் சார்பில் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
 

TAGS
stalin

Leave a Reply