குரு பூா்ணிமா: பிரதமா் வாழ்த்து

22 views
1 min read
Modi_Speech

குரு பூா்ணிமா தினத்தை முன்னிட்டு பிரதமா் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதத்தில் வரும் பவுா்ணமி ‘குரு பூா்ணிமா’வாக கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான குரு பூா்ணிமா ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. அதனையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமா் மோடி, தனது சுட்டுரை பக்கத்தில் வெளியிட்ட பதிவு:

குரு பூா்ணிமாவுக்கு ஏராளமான வாழ்த்துகள் வருகின்றன. இன்றைய தினம் நமது வாழ்க்கையை அா்த்தமுள்ளதாக மாற்றிய குருவிற்கு மரியாதை செலுத்தும் சிறப்பான நாளாகும் என்று அந்தப் பதிவில் அவா் தெரிவித்துள்ளாா்.

Leave a Reply