குளச்சலில் 9 பேருக்கு கரோனா: தினசரி சந்தை, பேருந்து நிலையம் மூடல்

16 views
1 min read
market

கோப்புப் படம்

குளச்சலில் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதிபடுத்தியதையடுத்து தினசரி சந்தை, பேருந்து நிலையம் மூடப்பட்டது. 

குளச்சல் தினசரி சந்தையில் கடந்த செவ்வாய்கிழமை குருந்தன்கோடு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் பிரதீப் குமார் தலைமையில் மருத்துவர்கள் சந்தைக்கு வந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் மாதிரி சளி எடுத்து சென்றனர். 

இதில் 6 ஆண்களுக்கும் 3 பெண்களுக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து குளச்சல் ஏஎஸ்பி விஸ்வேஸ் பி.சாஸ்திரி, காவல் ஆய்வாளர் ஜெயலெட்சுமி, சுகாதார ஆய்வாளர் ஜேஸ் ஆகியோர் சந்தையிலுள்ள மக்களை வெளியேற்றி கிருமி நாசினி தெளித்து சந்தையை மூடி சீல் வைத்தனர். 

மீன் வியாபாரிகள் பேருந்து நிலையத்தில் மீன் வியாபாரம் செய்ய முயற்சிக்கவே பேருந்து நிலையமும் மூடப்பட்டது.

TAGS
Corona Colachel

Leave a Reply