வேதாரண்யம் அருகே கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு ஏடிஎம் அட்டைகள் வழங்கல்

16 views
1 min read
nagai

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே வேளாண் கூட்டுறவு வங்கிகளில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளுக்கு ஏடிஎம் கார்டு எனப்படும் பணப்பரிவர்த்தனைக்கான அட்டைகள் வழங்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் கீழ் செயல்படும் வேளாண்கூட்டுறவு வங்கிகளில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளுக்கு ஏடிஎம் அட்டைகள் வழங்கும் புதிய நடைமுறை கொண்டு வரப்பபட்டுள்ளது.

இதனை அனைத்து வங்களின் கீழ் செயல்படும் ஏடிஎம் மையங்களிலும் பயன்படுதி பணப்பபரிவர்த்தனை செய்துக் கொள்ளலாம்.

இதன் அடிப்படையில் மருதூர் தெற்கு தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் உறுப்பினர்களாக விவசாயிகளுக்கு முதல் கட்டமாக உள்ள 160 பேருக்கு ஏடிம் அட்டைகள் வழங்கப்படுகிறது.

இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் ப.சோமசுந்தரம் தலைமை வகித்தார்.

கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் உதவி பொது மேலாளர் சதீஷ்குமார் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், மத்திய வங்கி கள மேலாளர் முத்தமிழ்ராஜா, வேதாரண்யம் கிளை அலுவலர் தமிழ்மாறன், கூட்டுறவு வங்கி செயலாளர் எஸ். சேகர், கூடுதல் செயலர் அசோகன், இயக்குநர்கள் வே.முருகையன், செந்தில், இந்திராணி சுப்ரமணியன், இந்திரா, சிங்காரவேல், பிச்சக்கண்ணு, ராசேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

TAGS
ATM cooperative banks

Leave a Reply