கூத்தாநல்லூர்: உடல் உழைப்புத் தொழிலாளர்கள் அமைப்புக்கு விண்ணப்பப் படிவம் வழங்கல் 

20 views
1 min read
kn

திருவாரூர்: கூத்தாநல்லூரில், உடல் உழைப்புத் தொழிலாளர்கள் அமைப்புக்கு விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டது. 

உலகத்தில் பணியாற்றக் கூடிய அனைவருக்கும் நல வாரியம் உள்ளது. அத்தனைத் தொழிலாளர்களுக்கும் அவரவர்களின் தொழிலுக்கு ஏற்றபடி நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பல நல வாரியங்கள் உள்ளன. இதில், கட்டடத் தொழிலாளர்கள் சங்கம் பெரிய அமைப்பாக உள்ளன. இதேபோல், உடல் உழைப்புத் தொழிலாளர்கள் அமைப்புக்காக, விண்ணப்பப் படிவங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கூத்தாநல்லூர், தோட்டச்சேரி மாரியம்மன் கோயில் வளாகத்தில், முகக்கவசங்கள் அணிந்து, சமூக இடைவெளியுடன் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பா.ஜ.க. திருவாரூர் மாவட்ட பொதுச் செயலாளர் எஸ்.பாஸ்கரன் தலைமை வகித்தார். அமைப்புச் சாரா தொழிலாளர் பிரிவு மாநிலச் செயலாளர் பாரதிமோகன் முன்னிலை வகித்தார். 

கூட்டத்தில், கூத்தாநல்லூர் நகரம், தோட்டச்சேரி, சேகரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், பாஸ்கரன் கூறியது. தமிழக அரசின் அமைப்புச் சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில், கட்டடத் தொழிலாளர்கள், உடல் உழைப்புத் தொழிலாளர்கள் என இரண்டு பிரிவுகள் உள்ளது. தமிழக கட்டடத் தொழிலாளர்கள் சங்கத்தில், கட்டுமானம் சம்பந்தப்பட்ட அனைத்தும் உள்ளது. அதே போல், உடல் உழைப்புத் தொழிலாளர்கள் சங்கத்தில், சாலையோரக் கடைகள், வீட்டு வேலைப் பார்ப்பவர்கள், வெளியூரில் வேலைப் பார்ப்பவர்கள், கடைகளில் வேலைப் பார்ப்பவர்கள், முடித்திருத்துவோர்கள், சைக்கிள் கடை வைத்திருப்பவர்கள், இட்லிக் கடை வைத்திருப்பவர்கள் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்டவைகள் உள்ளன. 

உடல் உழைப்புத் தொழிலாளர்களுக்கு என அமைப்பு இருப்பது பலருக்கு தெரியவில்லை. இந்த அமைப்பின் மூலம், உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு படிப்புக்கான நிதியுதவி, விடுதியில் தங்கி படிக்க நிதியுதவி, மேல்படிப்புக்கான நிதியுதவி எனவும் வழங்கப்படுகிறது. மேலும், உறுப்பினர்கள் இறந்து விட்டால், அவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவியும் வழங்குகிறார்கள். இவைகள் பலருக்குத் தெரியாமல், ஏதோ வேலைக்குப் போகிறோம், கொடுக்கும்  சம்பளத்தை வாங்கிக் கொண்டு வருவது என காலத்தைப் போக்கிக் கொண்டு இருக்கிறார்கள். கிராம மக்களுக்கு இவைகளை எடுத்துச் சொல்லி, நல வாரியத்தின் மூலம் நலத்திட்ட உதவிகள் பெற்றுத் தர உடல் உழைப்புத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராவதற்கான படிவங்கள் வழங்கப்பட்டன.

மேலும், மத்திய அரசின் திட்டங்களான, வீடு கட்டும் திட்டம், கழிப்பறை வசதிகள் கட்டும் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் குறித்தும் விளக்கப்பட்டன. கழிப்பறை வசதிகள் கட்டும் திட்டத்தில், விடுப்பட்டவர்களுக்கு மீண்டும் மத்திய அரசின் திட்டத்தில் கட்டித் தர ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

TAGS
Koothanallur

Leave a Reply