கேரளத்தில் புதிதாக 416 பேருக்கு கரோனா தொற்று உறுதி

18 views
1 min read
Kerala Chief Minister Pinarayi Vijayan

கேரள முதல்வர் பினராயி விஜயன்

கேரளத்தில் மேலும் புதிதாக 416 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

கேரளத்தில்புதிதாக 416 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கேரளத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,950 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக பாதிப்புக்குள்ளான 416 பேரில் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் 123 பேர், வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள் 51 பேர். மேலும் கரோனா தொற்றுள்ளவர்கள் மூலமாக பாதிப்பு 204. அதேசமயம் இன்று 112 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 3,820 பேர் குணமடைந்துள்ளனர். 

இன்றைய தேதியில் மொத்தம் 3,099 பேர் சிகிச்சையில் உள்ளனர். பலி எண்ணிக்கை 28 ஆக உள்ளது. 

TAGS
coronavirus

Leave a Reply