கேரளத்தில் புதிதாக 435 பேருக்கு கரோனா தொற்று

20 views
1 min read
Kerala reported 435 new COVID 19 cases today, taking active cases to 3,743. 4,097 patients have recovered from the disease in the state so till date: State Health Department

கேரளத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 435 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)

கேரளத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 435 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி கேரள முதல்வர் பினராயி விஜயன் பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:

“கேரளத்தில் இன்று புதிதாக 435 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 128 பேர் வெளிநாடுகளிலிருந்தும், 87 பேர் வெளிமாநிலங்களிலிருந்தும் வந்தவர்கள். இதைத் தொடர்ந்து அங்கு சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 3,743 ஆகியுள்ளது. இதுவரை மொத்தம் 4,097 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 13,478 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.”

TAGS
coronavirus

Leave a Reply