கேரளத்தில் மீண்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா

80 views
1 min read
Another day of over 1000 new Covid cases in Kerala

கேரளத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 1,083 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். (கோப்புப்படம்)

கேரளத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 1,083 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

கேரள சுகாதாரத் துறை அமைச்சர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பின்படி, அங்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 11,540-ஐ எட்டியுள்ளது. இதுவரை 16,303 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

திங்கள்கிழமை நிலவரப்படியே இன்றும் உள்ளூர் பாதிப்பு அதிகளவில் ஏற்பட்டுள்ளது. இன்று கேரளத்தில் மட்டும் 902 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய அறிவிப்பை முதல்வர் பினராயி விஜயன் நாள்தோறும் செய்தியாளர் சந்திப்பு மூலம் வெளியிட்டு வந்தார். உள்ளூர் பாதிப்பு எண்ணிக்கையின் தொடர் அதிகரிப்பு காரணமாக, அவர் செய்தியாளர்களைச் சந்திப்பதைத் தவிர்த்து வரலாம் என்று கணிக்கப்படுகிறது.

TAGS
coronavirus

Leave a Reply