கேரளத்தில் மேலும் 272 பேருக்கு கரோனா; பாதிப்பு 5,895 ஆக உயர்வு!

15 views
1 min read
272 new cases record in Kerala

கோப்புப்படம்

 

கேரளத்தில் மேலும் 272 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதித்தோர் குறித்த விவரங்களை முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்கள் சந்திப்பின் மூலமாக வெளியிட்டுள்ளார். 

அதன்படி, கேரளத்தில் இன்று புதிதாக 272 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 5,895 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 2,412 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 3,452 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 111 பேர் குணமடைந்துள்ளனர். இன்று ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, மொத்தமாக 30 பேர் உயிரிழந்துள்ளனர். 

கேரளத்தில் இன்று அதிகபட்ச ஒருநாள் பாதிப்பு(272) பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS
kerala

Leave a Reply