கேரளத்தில் மேலும் 301 பேருக்கு கரோனா; ஒரேநாளில் 107 பேர் குணமடைந்தனர்

17 views
1 min read
kerala-recorded-301-new-covid-19-cases

கேரள சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா

கேரளத்தில் மேலும் 301 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதித்தோர் குறித்த விவரங்களை மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா செய்தியாளர்கள் சந்திப்பின் மூலமாக வெளியிட்டுள்ளார். 

அதன்படி, கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 301 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,196 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 2,605 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 3,561 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 107 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், மொத்தமாக 28 பேர் உயிரிழந்துள்ளனர். 

கேரளத்தில் சமீபமாக 300க்கும் கீழ் ஒருநாள் பாதிப்பு இருந்த நிலையில், இன்று பாதிப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS
coronavirus

Leave a Reply