கேரள சுற்றுலாத்துறை அமைச்சரின் மகனுக்கு கரோனா

6 views
1 min read

காரோனோ பரிசோதனை

கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவிவருகிறது. இதனிடையே தமது மகனுகு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறை அலுவலகத்தில் பணிபுரிந்த நபர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து அலுவலகத்தில் பணியாற்றிய அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சுற்றுலாத்துறை அமைச்சரும் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார்.  அவருக்கு கரோனா இல்லை என தெரியவந்துள்ளது. ஆனால் அவரது மகனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 10,517 பேர் சிகிச்சை பெற்று வருவதாக கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

TAGS
coronavirus

Leave a Reply