கொந்தகை அகழாய்வில் மேலும் ஒரு முழு உருவ எலும்புக்கூடு

11 views
1 min read
கொந்தகை அகழாய்வில் செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் முழு உருவ எலும்புக்கூடு. 

கொந்தகை அகழாய்வில் செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் முழு உருவ எலும்புக்கூடு. 

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கொந்தகையில் நடைபெற்று வரும் அகழாய்வில் செவ்வாய்க்கிழமை மேலும் ஒரு குழந்தையின் முழு உருவ  எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. 

மேற்கண்ட இடங்களிலிருந்து செங்கல் கட்டுமானம், விலங்கு எலும்பு, மனித எலும்புகள், மண் பானைகள், ஓடுகள், சிறிய உலைகலன், எடைக் கற்கள், நீள வடிவ பச்சை நிற பாசிகள் ஆகியவை ஏற்கெனவே கண்டெடுக்கப்பட்டன. 
கொந்தகை அகழாய்வில் தொடர்ந்து மனித எலும்புகள், முதுமக்கள் தாழிகள் கிடைத்து வருவதால் இந்த இடம் பழங்காலத்தில் ஈமக்காடாக இருந்திருக்கலாம் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

கொந்தகையில் ஜூன் 18 ஆம் தேதி குழந்தையின் எலும்புக்கூடு முழு அளவில் கண்டெடுக்கப்பட்டது. 

இந்நிலையில் ஏற்கெனவே எலும்புக்கூடு கிடைத்த குழியிலேயே மேலும்  ஒரு குழந்தையின் எலும்புக்கூடு முழு அளவில் செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே கிடைத்த எலும்புக் கூட்டைவிட சிறியதாக உள்ளது. இது 75 செ.மீ உயர அளவில் உள்ளது. 

இந்த எலும்புக்கூட்டை மரபணு ஆய்வு செய்தபிறகே  இதன் காலம், வயது, பாலினம் போன்ற விவரங்கள் தெரியவரும் என தொல்லியல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply