கோடம்பாக்கம், அண்ணா நகரில் கரோனா சிகிச்சை பெறுவோர் அதிகம்: மண்டலவாரியாக பாதிப்பு நிலவரம்

14 views
1 min read
Chennai zone wise corona cases

கோப்புப்படம்

சென்னையில் அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு 2,481 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்‍கப்படுவோர் மற்றும் பலியாவோரின் எண்ணிக்‍கை நாளுக்‍கு நாள் அதிகரித்து வருகிறது.  

தற்போதைய நிலவரப்படி, சென்னையில் இதுவரை 76,158 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,221 பேர் உயிரிழந்துள்ளனர். 56,947 பேர் குணமடைந்த நிலையில், தற்போது 17,989 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தொடர்ந்து, சென்னையில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் கரோனா சிகிச்சை பெற்று வருவோர், குணமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. 

தற்போது ராயபுரம் மண்டலத்தில் 1,304 பேரும் தண்டையார்பேட்டை மண்டலத்தில் 1,407 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 1,760 பேரும், கோடம்பாக்கத்தில் 2,481 பேரும், அண்ணா நகரில் 1,941 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

TAGS
coronavirus

Leave a Reply