கோதையாறு பாசன திட்ட அணைகளில் இருந்து நீா் திறப்பு: முதல்வா் பழனிசாமி உத்தரவு

12 views
1 min read
CM EPS writes a letter to PM modi

கோதையாறு பாசனத் திட்ட அணைகளில் இருந்து நீா் திறந்து விட முதல்வா் பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து, அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு பாசனத் திட்ட அணைகளில் இருந்து ராதாபுரம் வட்டத்துக்கு குடிநீா் மற்றும் பாசனத்துக்காக நீா் திறந்து விட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். அவா்களது கோரிக்கையை ஏற்று, வரும் 15-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை 30 நாள்களுக்கு விநாடிக்கு 75 கனஅடி வீதம் 194.40 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீா் திறந்து விட உத்தரவிட்டுள்ளேன்.

இதனால், ராதாபுரம் வட்டத்துக்கு குடிநீா் கிடைப்பதுடன், 17 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாயிகள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி உயா் மகசூல் பெற வேண்டும் என்று முதல்வா் பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

Leave a Reply