கோவையில் ஒரே பகுதியில் 114 பேருக்கு கரோனா பாதிப்பு

13 views
1 min read
worldwide corona

corona test

 

கோவை, செல்வபுரத்தில் ஒரே பகுதியில் திங்கள்கிழமை ஒரே நாளில் 114 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை, செல்வபுரம் செட்டி வீதியில் கரோனா நோய்த் தொற்று அதிகளவில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இப்பகுதி கரோனா கட்டுப்பாட்டு மண்டலத்துக்குள் கொண்டுவரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து அருகிலுள்ள பகுதிகளில் உள்ள அனைவருக்கும் கரோனா பரிசோதனைக்கு சளி மாதிரிகள் எடுக்கப்பட்டன. இதில் செல்வபுரம் ஐயப்பா நகரில் ஒரே நாளில் 114 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையில் ஒரே நாளில் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டத்தில் இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும். இவர்கள் அனைவருக்கும் அறிகுறிகள் ஏதுமின்றி கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கொடிசியாவில் ஏற்படுத்தப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 

TAGS
coronavirus

Leave a Reply