கோவையில் கரோனாவுக்கு மேலும் ஒரு முதியவர் பலி

15 views
1 min read
death1

கோவை: கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கரோனா பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்று வந்த மேலும் ஒரு முதியவர் புதன்கிழமை அதிகாலை பலியானார்.

கோவை, 24 வீரபாண்டி பிரிவு வி.கே.வி.நகரை சேர்ந்த 65 முதியவர் காய்ச்சல் உள்பட அரிகுறிகளுடன் பெ.நா.பாளையம் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றுள்ளார். இங்கு மேற்கொண்ட பரிசோதனையில் முத்தியவருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து முதியவர் ஜூலை 2 -ஆம் தேதி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருடன் தொடர்புடையவர்களுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் இவரின் மகன், மகள் உள்பட 4 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்ய்யப்பட்டு இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

இதில் முதியவரின் உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை சிகிச்சைப் பலனின்றி முதியவர் உயிரிழந்தார். 

இவரது உடல் சுகாதாரத் துறையின் வழிகாட்டுதல்படி ஆத்துப்பாலம் மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது. இதன்மூலம் கோவை மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 -ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply