சங்ககிரியில் தீரன் சின்னமலை நினைவு தினம்: மரியாதை செலுத்துபவர்களுக்கு நேரம் ஒதுக்கீடு

9 views
1 min read
dheeran chinnamalai tribute sangakiri

தீரன் சின்னமலை நினைவிடம்

சங்ககிரியில் தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி மரியாதை செலுத்துபவர்களுக்கு நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவுதினம் ஆகஸ்ட் 2 ஞாயிற்றுக்கிழமை சங்ககிரியில் அனுசரிக்கப்படுகிறது. சங்ககிரி உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர்  பல்வேறு நிபந்தனைகளுடன்  பல்வேறு கொங்கு அமைப்புகள், அரசியல் கட்சிகளுக்கு நேரங்கள் ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். 

சங்ககிரி உட்கோட்ட  காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) எம்.நமச்சிவாயம்  வெளியிட்டுள்ள நிபந்தனைகள் அடங்கிய குறிப்பில் கடந்த ஆண்டுகளை போல் நிகழாண்டும் நிபந்தனைகள் அமுல்படுத்தப்படும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க சங்ககிரி நகர்பகுதிகள் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளன. விதிமுறைகளை மீறுவோர் மீது விடியோ பதிவுகளை வைத்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். 

இதில் ஆகஸ்ட் 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 11 மணி வரை அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட உள்ளன. அதனையடுத்து 11 மணி முதல் 11.30 மணி வரை சங்ககிரி வட்ட கொங்கு இளைஞர் சங்கம், கொங்கு வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பிற்கும்,  11.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மாவீரன் தீரன் சின்னமலை பேரவையினருக்கும்,  நண்பகல் 12  மணி முதல் 12.30 மணி வரை திமுகவிற்கும், 12.30 மணி முதல் 01.00 மணி வரை  கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினருக்கும் ஒதுக்கப்பட்டுல்ளது.

மேலும்  01 மணி முதல் 01.30 மணி வரை தேமுதிகவிற்கும், 01.30 மணி முதல் 2.00 மணி வரை பாஜகவிற்கும், 2 மணி முதல்  2.30 மணி வரை தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையினருக்கும், 2.30 மணி முதல் 3 மணி வரை மாநில கொங்கு வெள்ளாள கவுண்டர் பேரவை (மணி கவுண்டர் அணி), மாலை 3 மணி முதல் 3.30 மணி வரை கொங்குநாடு முன்னேற்றக்கழகத்திற்கும் (பெஸ்ட் ராமசாமி அணி) , 3.30 மணி முதல் 4 மணி வரை பாமகவிற்கும், 4 மணி முதல் 4.30 மணி வரை நாம் தமிழர் கட்சியினருக்கும், 4.30 மணி முதல் 5 மணி வரை கொங்கு மக்கள் முன்னனியினருக்கும்  நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGS
Sangakiri

Leave a Reply