சங்ககிரி சோமேஸ்வரர் கோயிலில் சனி பிரதோஷ சிறப்பு பூஜைகள்

8 views
1 min read
slm1

சங்ககிரி மலையடி வாரத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றன. 

அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் சுவாமிக்கு காலையில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேகங்கள், அலங்கராம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் மாலையில் உற்சவ மூர்த்தி சுவாமிகளுக்கு  சனி பிரதோஷத்தையொட்டி சந்தனம், திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.  

இக்கோயிலில் நடைபெறும் சனி பிரதோஷ பூஜைகளில் பொதுமுடக்கத்திற்கு முன்பு அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிகளை வழிப்பட்டப் பின்னர் பக்தர்கள் நந்தியின் காதில் தங்களது வேண்டுதல்களை கூறியவாறு கூறிச் சென்று வந்தனர். தற்போது கரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கையையொட்டி இக்கோயில் பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் வருவதால் கோயிலுக்கு பக்தர்கள் யாரும் செல்லவில்லை. 

அர்ச்சகர் மட்டும் ஆகமவிதிகள் படி பூஜைகள் செய்தார்.

TAGS
Someswarar Temple

Leave a Reply