சங்ககிரி டிரஸ்ட் சார்பில் ஹோமியோபதி மாத்திரைகள் இலவசமாக வழங்கல்

18 views
1 min read
sangagiri

கரோனாவால் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் ஹோமியோபதி மாத்திரை வழங்கல்

 

சேலம் மாவட்டம், சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் சார்பில் கரோனா தடை செய்யப்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு ஹோமியோபதி மாத்திரைகளை வியாழக்கிழமை இலவசமாக வழங்கப்பட்டன. 

சங்ககிரி நகர், பழைய எடப்பாடி சாலை பகுதியில் உள்ள 22வயதுடைய பெண் ஒருவர் பெங்களூர் வேலைக்குச் சென்று வீடு திரும்பியுள்ளார். அவருக்கு ஜூன் 5ம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதனையடுத்து சுகாதாரத்துறையின் சார்பில் பழைய எடப்பாடி சாலை பகுதியாக அடைக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதி எனப் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் பதாகைகள் வைக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் அப்பகுதி கொண்டு வரப்பட்டன. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி தன்மையுள்ள ஹோமியோபதி மாத்திரைகளை இலவசமாக வழங்குவதென சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் சார்பில் முடிவு செய்துள்ளனர். 

சங்ககிரி வருவாய்க் கோட்டாட்சியர் மு.அமிர்தலிங்கம் தலைமையில் ஹோமியோபதி மருத்துவர்கள் எம்.தியாகராஜ், கே.சுபலட்சுமி ஆகியோர் தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள 100 குடும்பங்களுக்கு மாத்திரைகளை இலவசமாக வழங்கி மாத்திரைகளை எவ்வாறு உட்கொள்வது குறித்தும்  அதன் பயன்களையும்  விளக்கிக் கூறினர். 

சங்ககிரி பேரூôரட்சி செயல் அலுவலர் பாலசுப்ரமணியம், சுகாதார ஆய்வாளர் லோகநாதன், துப்புரவு மேற்பார்வையாளர்கள் சுரேஷ், வெங்கடேஷ், இன்னர்வீல் சங்கத்தலைவி இந்திராணிகார்த்திகேயன், முன்னாள் தலைவி வசந்திமுரளிதரன், சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட்  தலைவர்  செயலர் ஆர்.ராகவன், நிர்வாகிகள் கார்த்திகேயன், கணேசன், பொறியாளர் வேல்முருகன், வேலு  உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

TAGS
homeopathic pills

Leave a Reply