சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 3,200 லிட்டர் கிருமி நாசினி தெளிப்பு

16 views
1 min read
csangagiri

சங்ககிரி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பவானி பிரதான சாலையில் புதன்கிழமை கிருமிநாசினி தெளிக்கும் தூய்மைப் பணியாளர்.

 

கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையாக சேலம் மாவட்டம், சங்ககிரி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வாகனங்கள் மூலம் புதன்கிழமை 3,200 லிட்டர் கிருமி நாசினி, கொசுமருந்துகள் தெளிக்கப்பட்டன. 

சங்ககிரி நகர் பழைய எடப்பாடி சாலை பகுதி தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டதையடுத்தும், கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சங்ககிரி பேரூராட்சியின் சார்பில் செயல் அலுவலர் பாலசுப்ரமணி தலைமையில் துப்பரவு ஆய்வாளர் லோகநாதன் மேற்பார்வையில் சுகாதார மேற்பார்வையாளர்கள் சுரேஷ், வெங்கடேஸ் ஆகியோர் சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட திருச்செங்கோடு சாலை, சேலம், பவானி பிரதான சாலைகள், பழைய, புதிய எடப்பாடி சாலைகள், பால்வாய், அரசு மருத்துவமனை சாலை, பொந்துகிணறு உள்ளிட்ட பகுதிகளில் உள்ளவீடுகள், அரசு அலுவலகங்கள், மளிகை கடைகள், சாலைகளில், பேரூராட்சி வாகனங்களின் மூலம் தூய்மை பணியாளர்கள் பல பிரிவுகளாக பிரிந்து சென்று 3200 லிட்டர் கிருமி நாசினிகளையும், கொசு மருந்துகளையும் தெளித்தனர்.

TAGS
கரோனா

Leave a Reply