சச்சினின் 100 சதங்களின் சாதனையை இந்த வீரர் முறியடிப்பார்: பிராட் ஹாக் கணிப்பு

20 views
1 min read
sachin_10

 

சச்சினின் 100 சர்வதேச சதங்களின் சாதனையை இந்திய கேப்டன் விராட் கோலி முறியடிப்பார் என ஆஸி. முன்னாள் வீரர் பிராட் ஹாக் கூறியுள்ளார்.

ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

சச்சினின் 100 சர்வதேச சதங்களின் சாதனையை இந்திய கேப்டன் விராட் கோலி முறியடிப்பார். சச்சின் காலத்தில் இருந்ததை விடவும் தற்போது உடற்தகுதி விஷயத்தில் வீரர்கள் அதிக அக்கறையுடன் உள்ளார்கள். உடற்தகுதியை மேம்படுத்த பயிற்சியாளர்களின் உதவியும் இன்றைய வீரர்களுக்குக் கிடைக்கிறது. சிறிய காயம் ஏற்பட்டால் கூட அதை உடனடியாகக் கவனிக்க மருத்துவர்களும் பயிற்சியாளர்களும் உள்ளார்கள்.

இதனால் குறைந்த அளவிலான ஆட்டங்களில் மட்டுமே விளையாட முடியாமல் போகிறது. மேலும் தற்போது அதிக ஆட்டங்களில் விளையாடுகிறார்கள். எனவே கோலியால் சச்சினின் சாதனையை முறியடிக்க முடியும் என்றார். 

சச்சின் 51 டெஸ்ட் சதங்களும் 49 ஒருநாள் சதங்களும் என மொத்தமாக 100 சர்வதேச சதங்கள் அடித்துள்ளார். கோலி இதுவரை 70 சர்வதேச சதங்கள் (டெஸ்டில் 27, ஒருநாள் ஆட்டத்தில் 43) அடித்துள்ளார்.

TAGS
Kohli

Leave a Reply