சத்தீஸ்கர்: காவல்துறையிடம் சரணடைந்த மாவோயிஸ்டு தம்பதி!

18 views
1 min read
Maoist couple surrendered before police

கோப்புப்படம்

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா பகுதியில் மாவோயிஸ்டு தம்பதியினர் காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளனர். 

சத்தீஸ்கர் மாநிலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் அதிகமாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் உள்ளூர் மக்கள் சிலர் மாவோயிஸ்டுகளுக்கு மறைமுகமாக உதவி புரிந்து வருகின்றனர். 

இதையடுத்து, மாவோயிஸ்டுகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த அதில் சிக்கியுள்ள பலரை காவல்துறையிடம் வந்து சரணடையுமாறு காவல்துறை கோரிக்கை விடுத்தது. 

அதன்படி, தண்டேவாடா பகுதியில் மாவோயிஸ்டு தம்பதியினர் இருவர் போலீஸ் சூப்பிரண்டு (எஸ்.பி.) அபிஷேக் பல்லவ் முன்பாக  சரணடைந்தனர். இவர்கள்  மாவோயிஸ்டுகளுக்கு உள்ளூர் தகவல்களை வழங்கி வந்தனர். 

முன்னதாக, ஒரு மாதத்தில் 28 மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGS
சத்தீஸ்கர்

Leave a Reply