சமூகவலைத்தளங்களில் யாரையும் பின்தொடராதது ஏன்?: நடிகை ஓவியா பதில்

18 views
1 min read
oviya1

 

களவாணி படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமான ஓவியா, பிக் பாஸ் சீசன் 1-ல் பங்கேற்று அதிகப் புகழை அடைந்தார்.

ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடி அவர்களுடைய கேள்விகளுக்குப் பதில் அளித்தார் ஓவியா. அவற்றின் தொகுப்பு:

சமுகப் பிரச்னைகளுக்குக் குரல் கொடுப்பீர்களா?

உண்மையான குற்றவாளிகளைத் தண்டிக்கும் அதிகாரம் எனக்குக் கிடைக்காமல் நிஜ வாழ்வில் நடிக்க மாட்டேன்.

தற்போது நடித்துக்கொண்டிருக்கும் படங்கள்?

சில இணையத் தொடர்கள்

அடுத்தது படமா அல்லது திருமணமா?

திருமணம் செய்யும் எண்ணம் இப்போதைக்கு இல்லை.

ட்விட்டரில் தொடர்ந்து இயங்குவதில்லையே, ஏன்?

நான் கணிக்க முடியாதவள். 

பிடித்த பிக் பாஸ் போட்டியாளர்?

நான் தான்.

உங்களுக்குக் காதலர் இருக்கிறாரா?

கிடையாது. நான் சிங்கிள். 

நடிக்காதபோது உங்கள் ரசிகர்களை எப்படித் தக்கவைக்கப் போகிறீர்கள்?

ரசிகர்களை முட்டாளாக்க நான் விரும்பவில்லை. என்னைப் பிடித்திருந்தால் விரும்புங்கள். பிடிக்கவில்லையென்றால் வெறுக்கலாம். அவ்வளவுதான்.

ட்விட்டரில் யாரையும் பின்தொடராதது ஏன்?

அடுத்தவருடைய வாழ்க்கையில் ஆர்வம் இல்லை.

TAGS
Oviya

Leave a Reply