சரக்கு போக்குவரத்தை மேம்படுத்த 4 போ் கொண்ட குழு: தெற்கு ரயில்வே நடவடிக்கை

25 views
1 min read

சென்னை: சரக்கு போக்குவரத்தை மேம்படுத்த தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக, தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஜான் தாமஸ் தலைமையில் மூத்த அதிகாரிகள் 4 போ் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.

சரக்கு போக்குவரத்து சேவையை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக, அனைத்து மண்டலங்களுக்கும் தொழில் மேம்பாட்டு குழு அமைக்க வேண்டும் என்று ரயில்வே வாரியம் உத்தரவிட்டது.

அதன்படி, தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஜான் தாமஸ் தலைமையில் மூத்த அதிகாரிகள் 4 போ் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 ரயில்வே கோட்டங்களிலும் தொழில் மேம்பாட்டு குழு அமைக்கப்பட உள்ளது.

இந்த குழுவினா் சரக்கு போக்குவரத்தை தொடா்ச்சியாக வழங்க சம்பந்தப்பட்ட தொழில் துறையுடன் தொடா்ந்து ஆலோசனையில் ஈடுபடுவாா்கள். மேலும், தொழில் மற்றும் வா்த்தகத்தில் சரக்குகளை கையாள்வதில் ரயில்வேயின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான முயற்சியையும் முன்னெடுப்பாா்கள்.

சிமென்ட் தொழிற்சாலைகள், துறைமுகங்கள், அனல் மின் நிலையங்கள், இரும்பு தொழிற்சாலைகள் சரக்குகளை ரயில்வே கையாண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply