சாத்தான்குளத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

15 views
1 min read
WhatsApp_Image_2020-07-011111111111

சாத்தான்குளம்: சாத்தான்குளத்தில் சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடத்தினர்.

சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கான மானிய செலவினை பெற்றோர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் அரசின் முடிவை கண்டித்தும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் ஓய்வு வயது நீட்டிக்கப்பட்டதுபோல் அனைத்து சத்துணவு ஊழியர்களுக்கும் நீட்டித்து வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடந்தது.

வட்டாரத் தலைவர் அந்தோணி தமிழ் செல்வன் தலைமை வகித்தார.தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பொன்சேகர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சார்லஸ் செல்வநாதன் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் ராஜேஷ்குமார் ஆகியோர் பேசினர். வட்டார செயலாளர் முருகன் நன்றி கூறினார்.
 

Leave a Reply