சாத்தான்குளம் சம்பவம்: பாதித்த குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கினார் ஜி.கே.வாசன்

23 views
1 min read
sathankulam

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் நேரில் சந்தித்து ஆறுதல்

 

சாத்தான்குளத்தில் காவல்துறையினர் தாக்கி உயிரிழந்த ஜெயராஜ் பென்னிக்ஸ் குடும்பத்தை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, ரூ.3 லட்சம் நிதியுதவியை வழங்கினார்.

தமிழ் மாநில காங்கிரஸ்  கட்சி தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. பேட்டி..

ஜெயராஜ்,பென்னிக்ஸ் விவகாரத்தில் அநாகரிகமான சம்பவம் நடந்துள்ளது. சட்டப்படியான நடவடிக்கை தொடரவேண்டும். இந்த நடவடிக்கை முடிவு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் ரணத்திற்கு மருந்தாக விசாரணை மூலம் நியாயம் கிடைக்க வேண்டும்.

விசாரணை போகும்பாதை சரியாக உள்ளது. இதனால் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள். இந்த குடும்பத்திற்கு நியாயம் கிடைக்கும் அதற்கு நாங்கள் துணை நிற்போம். நீதிமன்றம் மற்றும் தமிழக அரசின் செயல்பாடுகள் மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கின்ற வகையில் இருப்பதால்தான் குற்றவாளிகளை கைது செய்யப்பட்டுத் தண்டிக்கப்படும் நிலையில் உள்ளது. 

ஒரு சில காவல்துறையினரின் தவறான அணுகுமுறையால் இந்த சம்பவம் நடந்துள்ளது. கரோனா காலகட்டத்தில் காவல்துறை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. மேலும் இதே காவல்துறையை சார்ந்த சிபிசிஐடி சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

TAGS
sathankulam

Leave a Reply