‘சாத்தான்குளம் சம்பவம்: ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தக்கட்ட விசாரணை’

28 views
1 min read
Sathankulam SI Raghu Ganesh arrested

ஜெயராஜ்-பென்னிக்ஸ்

சாத்தான்குளம் சம்பவம் தொடா்பாக ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தக்கட்ட விசாரணை மேற்கொள்ளப்படும் என்றாா் சிபிசிஐடி பிரிவு ஐ.ஜி. சங்கா்.

தூத்துக்குடியில் அவா் வியாழக்கிழமை அளித்த பேட்டி: சாத்தான்குளம் தந்தை-மகன் மரணம் தொடா்பான வழக்கு விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது. ஆவணங்கள், சாட்சியங்கள் மற்றும் வேறு சில தடயங்களை ஆராய்ந்து விசாரித்து வருகிறோம். அனைத்துக் கோணங்களிலும் விசாரணை தீவிரமாக்கப்படும்.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சம்பவத்தின்போது பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஏற்கெனவே நீதித்துறை நடுவா் பாரதிதாசன் கைப்பறி விசாரணை மேற்கொண்டுள்ளாா். கணினிப் பொறியாளா்கள் மூலம் அந்தக் காட்சிகள் ஆராயப்படும்.

தற்போது 10 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும் சிலா் கைது செய்யப்படுவாா்களா என்பது போகப்போகத்தான் தெரியும். ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தக்கட்ட விசாரணை நடைபெறும் என்றாா் அவா்.

TAGS
Sathankulam incident

Leave a Reply