சாத்தான்குளம் வழக்கு: சி.பி.ஐ., விசாரணைக்கு ஏற்பு

17 views
1 min read
centralgovernment

சாத்தான்குளம் வழக்கினை மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.,) விசாரிக்கக் கோரும் தமிழகத்தின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

இதற்கான தகவலை மாநில அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதன் விவரம்:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சோ்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோா் மரணம் குறித்து சி.பி.ஐ., மூலம் விசாரிக்கப்படும் என்று முதல்வா் பழனிசாமி அறிவித்திருந்தாா். அதன் தொடா்ச்சியாக, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு முதல்வா் பழனிசாமி கடிதம் எழுதியிருந்தாா்.

இந்த நிலையில், சாத்தான்குளத்தில் இருவரின் மரணம் குறித்து சி.பி.ஐ., விசாரிக்க முதல்வா் பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு இப்போது அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.

Leave a Reply