சிங்கப்பூரில் காதலரைக் கரம் பிடித்தார் ‘அறிந்தும் அறியாமலும்’ நடிகை சமிக்‌ஷா!

18 views
1 min read
samiksha6161

 

2005-ல், அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமிக்‌ஷா. மனதோடு மழைக்காலம், மெர்க்குரி பூக்கள், தீ நகர், முருகா, பஞ்சாமிர்தம், கார்த்திகை ஆகிய பல தமிழ்ப் படங்களில் நடித்தார். 2012-க்குப் பிறகு பஞ்சாபி படங்களில் மட்டும் நடித்து வந்தவர் கடந்த வருடம் பிரணாம் என்கிற ஹிந்திப் படத்தில் நடித்தார். தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். 

இந்நிலையில் சிங்கப்பூரைச் சேர்ந்த பாடகர் மற்றும் தொழிலதிபர் ஷயீல் ஓஸ்வாலைத் காதல் திருமணம் செய்துகொண்டுள்ளார் சமிக்‌ஷா. கடந்த ஜூலை 3 அன்று சிங்கப்பூரில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றதாக சமிக்‌ஷா கூறியுள்ளார். சமிக்‌ஷா – ஓஸ்வால் ஆகிய இருவருக்கும் இது 2-வது திருமணமாகும். இத்திருமணம் பற்றி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு சமிக்‌ஷா பேட்டியளித்ததாவது: 

எங்களுடைய முதல் திருமணம் தோல்வியில் முடிந்தபிறகு மீண்டும் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என இருவரும் முடிவெடுத்திருந்தோம். அவருக்கு 17 வயதில் சோஹன்னா, 16 வயதில் ஷிவம் என இரு குழந்தைகளும் எனக்கு அமேபிர் என்கிற 10 வயது மகனும் உள்ளார்கள். 2004-ல் எனக்குத் திருமணம் ஆனது. 2018-ல் விவாகரத்து பெற்றேன். 

என்னுடைய புகைப்படங்களைப் பார்த்து பாடல் விடியோவுக்காக ஓஸ்வால் என்னை அணுகினார். என்னைப் பார்த்தவுடன் காதலிக்க ஆரம்பித்து விட்டாராம். ஆனால் எனக்கு அவர் மீது உடனடியாகக் காதல் வரவில்லை. பாடல் படமாக்கப்படும்போதுதான் அவருடன் மனத்தளவில் நெருக்கமானேன். பிப்ரவரி மாதம் மற்றொரு பாடலைப் படமாக்க சிங்கப்பூருக்கு வந்தேன். மும்பைக்குத் திரும்பும் எண்ணம் இல்லை. திரைத்துறையிலிருந்து விலக முடிவு செய்துவிட்டேன். என் மாமனார் ஆரம்பித்த பட நிறுவனத்தை மீண்டும் இயங்க வைக்க வேண்டும். கதை, இயக்கம் போன்றவற்றில் ஆர்வம் செலுத்தவுள்ளேன் என்றார். 

 

 

 

 

View this post on Instagram

 

 

 

 

 

 

 

 

 

 

 

A post shared by Sameksha (@iamsameksha) on Jul 6, 2020 at 10:09am PDT

 

TAGS
Sameksha Singh

Leave a Reply