சிதம்பரத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

15 views
1 min read
108 ambulance workers protest in Chidambaram

ஆம்புலன்ஸ் தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

 

 சிதம்பரம் : சிதம்பரத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் காந்தி சிலை அருகே புதன்கிழமை நடைபெற்றது.

108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு  முழு பாதுகாப்பு கவசம் உள்ளிட்ட பொருட்கள் வழங்க வேண்டும், தொழிலாளர்கள் மீது விரோத நடவடிக்கையைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர்  ப.வெங்கடேசன் தலைமை வகித்தார். மாவட்ட துணை பொருளாளர் குமரேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் நா.வெங்கடேசன் கண்டன உரையாற்றினார். ஊழியர்கள் மகேஷ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 ஆர்ப்பாட்டத்தில் தனிமனித சமூக இடைவெளி கடைபிடித்து 5 பேர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

TAGS
demo

Leave a Reply