சிதம்பரம் ரோட்டரி சங்கம் சார்பில் கபசுர குடிநீர் விநியோகம்

21 views
1 min read
kabasura

 

சிதம்பரம் ரோட்டரி சங்கம் சார்பில் புதன்கிழமை காலை மேலவீதியில் உள்ள ஆறுமுகநாவலர் மேல்நிலைப்பள்ளி அருகில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது .

ரோட்டரி சங்கத் தலைவர் என்.என் பாபு கப சுர குடிநீர் வழங்கும் முகாமை தொடங்கி வைத்தார். முன்னாள் தலைவர்கள் கே .ஜி.நடராஜன் வி.ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். சங்க உறுப்பினர்கள் வி. அழகப்பன், கனகவேல், ராஜசேகரன், சீனுவாசன், இளையராஜா, சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். செயலாளர் எஸ் அரி தனராஜ் நன்றி கூறினார்.

Leave a Reply