சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கணினி குறியீட்டை தவற விட்டதால் சான்றிதழ் வழங்குவதில் தேக்கம்

16 views
1 min read
computer-jobs

 

சிதம்பரம்: சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கணினி  உள்நுழைவு குறியீடு தவறவிட்டதால், கடந்த 15 தினங்களாக சான்றிதழ்கள் வழங்குவது தேக்கம் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள், மாணவர்கள் அவதியுற்றுள்ளனர்.

சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாற்றம், வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், நில உரிமை சான்றிதழ் உள்ளிட்ட 200 வகையான சான்றிதழ்கள் கணினி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கப்பட்டு வழங்கப்பட்டு வந்தது. சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 15 தினங்களாக கணினி உள்நுழைவு குறியீட்டை துணை வட்டாட்சியர் தவறவிட்டதால், சான்றிதழ் வழங்கமுடியாமல் மக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். குறிப்பாக மாணவர்கள் விண்ணப்பித்த வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். அதிகாரிகள் கணினி உள்நுழைவு குறியீடு தவறவிட்டதால், சான்றிதழ்கள் வழங்க முடியாமல் உள்ளது என தெரிவிக்கின்றனர். இதுகுறித்து வட்டாட்சியரிடம் கேட்ட போது கணினி நுழைவு குறியீட்டு தவறவிட்டதால், இந்நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில் சரி செய்யப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும் என தெரிவித்தார். 

எனவே கடலூர் மாவட்ட நிர்வாகம், சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள கணினி உள்நுழைவு குறியீடு வழங்கி விண்ணப்பித்து காத்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு சான்றிதழ்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

Leave a Reply