சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் குறித்து வெளியாகும் தகவல் உண்மையல்ல

15 views
1 min read
CBSE Examination Results date not true

பத்து மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்று சிபிஎஸ்இ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

முன்னதாக, சிபிஎஸ் 10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஜூலை 11ம் தேதியும், 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 13-ம் தேதியும் வெளியாக உள்ளதாக செய்திகள் வெளியாகின. அந்த தகவல்கள் உண்மையில்லை என்று சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் சிபிஎஸ்இ தேர்வு முடிவு குறித்த அறிக்கை போலியானது என்று சிபிஎஸ்இ தகவல் தொடர்பு அதிகாரி ராம ஷர்மா தகவல் அளித்துள்ளார்.

இதுவரை தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்து சிபிஎஸ்இ நிர்வாகம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதே சமயம், அது தொடர்பான அறிவிப்புகள் சிபிஎஸ்இ-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது அதிகாரப்பூர்வ சமூகவலைத்தளப் பக்கத்தில் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 

TAGS
exam result

Leave a Reply