சியாமா பிர​சாத் முகர்ஜி பிறந்த நாள்: பிர​த​மர் மோடி, வெங்​கய்ய நாயுடு மரியாதை

16 views
1 min read

​புது தில்லி: ​பா​ர​திய ஜன சங்க நிறு​வ​னர் சியாமா பிர​சாத் முகர்​ஜி​யின் பிறந்​த​நாளை ஒட்டி பிர​த​மர் நரேந்​திர மோடி, குடி​ய​ரசு துணைத் தலை​வர் வெங்​கய்ய நாயுடு ஆகி​யோர் அவ​ருக்கு திங்​கள்​கி​ழமை மரி​யாதை செலுத்​தி​னர்.

பிர​த​மர் நரேந்​திர மோடி வெளி​யிட்​டுள்ள சுட்டு​ரைப் பதி​வில், “டாக்​டர் சியாமா பிர​சாத் முகர்​ஜி​யின் பிறந்த நாளில் அவ​ரைத் தலை​வ​ணங்​கு​கி​றேன். அர்ப்​ப​ணிப்​புள்ள தேச பக்​த​ரான அவர், இந்​தி​யா​வின் வளர்ச்​சிக்கு சீரிய பங்​க​ளிப்பை வழங்​கி​யுள்​ளார். ஒன்​று​பட்ட இந்​தி​யா​வுக்​காக அவர் திறம்​பட செய​லாற்​றி​னார். அவ​ரது எண்​ணம் மற்​றும் கொள்​கை​கள் நாட்டு மக்​க​ளுக்கு ஊக்​கம் அளிக்​கக் கூடி​ய​தாக உள்​ளது’ என குறிப்​பிட்​டுள்​ளார்.

குடி​ய​ரசு துணைத் தலை​வர் வெங்​கய்ய நாயு​டு​வின் அலு​வ​லக சுட்டு​ரைப் பதி​வில், “ஷியாம பிர​சாத் முகர்ஜி மகத்​தான தேச பக்​தர். தேசிய ஒரு​மைப்​பாட்​டைப் பாது​காக்​க​வும், ஜம்மு – காஷ்​மீரை முழு​மை​யாக இந்​தி​யா​வு​டன் இணைக்​க​வும் இடை​வி​டா​துப் போரா​டி​ய​வர். தாய்​நாடு மீதான அவ​ரது பற்று ஒவ்​வொரு இந்​தி​ய​ருக்​கும் உத்​வே​கம் அளிக்​கும். அவர் எப்​போ​தும் நினை​வு​கூ​ரப்​ப​டு​வார். 

வழக்​கு​ரை​ஞர், தத்​து​வ​வி​ய​லா​ளர், கல்​வி​யா​ளர் என பன்​மு​கத் திற​மை​யு​டன் புகழ்​பெற்று விளங்​கி​ய​வர். இளம் வய​தி​லேயே கல்​கத்தா பல்​க​லைக்​க​ழ​கத்​தின் துணை​வேந்​த​ராக செயல்​பட்​ட​வர்.  சுதந்​திர இந்​தி​யா​வின் முதல் தொழில் துறை அமைச்​ச​ராக பதவி வகித்​த​வர்’ என வாழ்த்தி கு​றிப்​பிட்​டுள்​ளார்.

Leave a Reply