சியாம பிரசாத் முகர்ஜி பிறந்தநாள்: மயிலாடுதுறையில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

16 views
1 min read
siyama_prasad

சியாம பிரசாத் முகர்ஜியின் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தும் பாஜகவினர்.

 

பாரதீய ஜன சங்க நிறுவனர் சியாம பிரசாத் முகர்ஜியின் 119-வது பிறந்த நாள் விழாவை மயிலாடுதுறையில் பாரதிய ஜனதா கட்சியினர் திங்கள்கிழமை பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

பாரதீய ஜன சங்க நிறுவனர் சியாம பிரசாத் முகர்ஜியின் 119-வது பிறந்த நாள் விழாவை மயிலாடுதுறையில் பாரதிய ஜனதா கட்சியினர் கொண்டாடினர். இதையொட்டி, மயிலாடுதுறை நகரத் தலைவர் மோடி.கண்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக நகர அலுவலக வாசலில் அலங்கரித்து வைக்கப்பட்ட சியாம பிரசாத் முகர்ஜியின் உருவப்படத்துக்கு, மத்திய அரசு தலைமை வழக்குரைஞர் கே.ராஜேந்திரன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் கோவி.சேதுராமன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து, மாவட்ட பொதுச்செயலாளர் ஸ்ரீதர், எஸ்.டி.எம்.செந்தில்குமார், மாவட்ட துணைத் தலைவர் முட்டம் செந்தில், நகரப் பொறுப்பாளர்கள் ராகுல், பி.சி.பாஸ்கர், முரளி, உமாசங்கர் உள்ளிட்டோர் சியாம பிரசாத் முகர்ஜியின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். 
 

TAGS
Birthday

Leave a Reply