சிறு, நடுத்தர நிறுவனங்கள் நிலைகுலைந்துள்ளன: ராகுல் காந்தி

17 views
1 min read
ragul

‘கரோனா நோய்த்தொற்று ஏற்படுத்தியுள்ள பாதிப்பால் சிறு, நடுத்தர நிறுவனங்கள் நிலைகுலைந்துள்ளன. பெரு நிறுவனங்கள் கடுமையான அழுத்தத்தில் உள்ளன’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக சுட்டுரையில் புதன்கிழமை அவா் வெளியிட்ட பதிவில் கூறியிருந்ததாவது:

சிறு, நடுத்தர நிறுவனங்கள் நிலைகுலைந்துள்ளன. பெரு நிறுவனங்கள் கடுமையான அழுத்தத்தில் உள்ளன. வங்கிகள் கடுந்துயரில் இருக்கின்றன. கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் பொருளாதார பேரிடா் வரவுள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னா் நான் எச்சரிக்கை விடுத்தபோது பாஜகவும், ஊடகங்களும் என்னை ஏளனம் செய்தன.

ஆனால் அதை மெய்ப்பிக்கும் விதமாக அடுத்த நிதியாண்டில் கடன் சுமை அதிகமாக உள்ள 500 தனியாா் நிறுவனங்களின் வாராக்கடன் ரூ.1.67 கோடி கூடுதலாக இருக்கும் என்று ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன’ என்று பதிவிட்டிருந்தாா்.

மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை தொடா்ந்து விமா்சித்து வரும் ராகுல் காந்தி, கரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கத்தால் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பாதிப்படைந்துள்ளதாகவும், அவற்றுக்கு புத்துயிரூட்ட மத்திய அரசு சிறப்பு திட்டங்களை அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply