சிவகங்கை அருகே விவசாயத் தோட்டத்தில் பிடிபட்ட 17 மலைப்பாம்புக் குட்டிகள்

20 views
1 min read
17 baby pythons rescued in Sivaganga district

சிவகங்கை அருகே விவசாயத் தோட்டத்தில் பிடிபட்ட 17 மலைப்பாம்புக் குட்டிகள்

சிவகங்கை அருகே விவசாயத் தோட்டத்தில் 17 மலைப்பாம்புக் குட்டிகளை தீயணைப்புத் துறையினர் கைப்பற்றினர்.

சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டி அருகே அச்சரம் பட்டியைச் சேர்ந்த கணேசன் என்பவரது தோட்டத்தில் பனைமரப் பொந்தில் மலைப்பாம்புவின் 17 குட்டிகள் இருப்பதாக தீயணைப்புத் துறைக்குத் தகவல் வந்தது. 

அதனடிப்படையில், திருப்பத்தூர் தீயணைப்புத்துறையினர் அச்சரம் பட்டிக்கு விரைந்து சென்று கணேசன் தோட்டத்தில் இருந்து மலைப்பாம்பின் குட்டிகளை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

வனத்துறையினர் 17 மலைப்பாம்புக் குட்டிகளை மதகுபட்டி அருகே உள்ள மண்மலைக்காடு வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டுச் சென்றனர்.

TAGS
சிவகங்கை

Leave a Reply