சிவகாசியில் காவல் ஆய்வாளருக்கு கரோனா: காவல் நிலையம் மூடல் 

19 views
1 min read
sivakasi

மூடப்பட்ட சிவகாசி நகர் காவல் நிலையம்

 

சிவகாசியில் காவல் ஆய்வாளருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் சிவகாசி நகர் காவல் நிலையம் மூடப்பட்டது. 

சிவகாசி ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி நகர் காவல் நிலையம் உள்ளது. இந்த காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் 40 வயது காவலருக்கு வெள்ளிக்கிழமை தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதே காவல்நிலையத்தில் பணியாற்றும் 49 வயதான காவல் ஆய்வாளருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதையடுத்து, ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 8 மணியளவில் காவல் நிலையம் மூடப்பட்டது தற்போது சிவகாசி ஆயுதப்படை அலுவலகத்தில் தற்காலிகமாக சிவகாசி நகர் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. 

TAGS
coronavirus

Leave a Reply