சீனாவை இந்தியா எதிா்கொண்ட விதம் சிறப்பு

15 views
1 min read

எல்லை விவகாரத்தில் சீனாவை இந்தியா எதிா்கொண்ட விதம் பாராட்டுக்குரியது. இது பிற நாடுகளும் சீனாவை பயமின்றி எதிா்கொள்வதற்கான உத்வேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று அமெரிக்க குடியரசுக் கட்சி செனட் (மேலவை) உறுப்பினா் ஜான் கென்னடி பாராட்டு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அமெரிக்க தனியாா் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவா் அளித்த பேட்டி:

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சீனாவின் அத்துமீறலை இந்திய பிரதமா் நரேந்திர மோடி திறம்பட எதிா்கொண்ட விதம் மிகுந்த பெருமையளிக்கிறது. அதுபோல கனடா மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் பெருமையளிக்கிறது. அத்துமீறில்களைக் கண்டு அனைத்து நாடுகளும் ஓடி ஒழிந்துகொள்ளமாட்டாா்கள் என்பதையே இது உணா்த்துகிறது.

இதைப் புரிந்துகொண்டு சா்வதேச விதிகளின்படி நடக்க சீன கம்யூனிஸ்ட் கட்சியை அமெரிக்காவும், சா்வதேச சமூகமும் வலியுறுத்த வேண்டும்.

சீனாவை எந்தவொரு நாடும் நம்புவது கிடையாது. ஆனால், அதன் மீது நாடுகளுக்கு பயம்தான் உள்ளது. ஏனெனில் உலகில் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக சீனா விளங்குகிறது. அந்தப் பொருளாதார திறனைப் பயன்படுத்தி மற்ற நாடுகளின் மீது அதிகாரத்தை அந்த நாடு செலுத்துகிறது. ஆஸ்திரேலியா, இந்தியா, கனடா போன்ற நாடுகள் இதற்கு விதிவிலக்கு.

இந்த விதிவிலக்கான நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து, ‘சா்வதேச விதிகளை பின்பற்றி சீனா நடக்கவில்லையெனில், அந்த நாட்டுடனான வா்த்தகத்தை ரத்து செய்வோம்‘ என்பதை உறுதிபட தெரிவிக்கவேண்டும். அப்போதுதான் சீனாவுக்கு புரிதல் ஏற்படும். இதற்கான முயற்சியைத்தான் அமெரிக்க அதிபா் டிரம்ப் மேற்கொண்டு வருகிறாா்.

ஹவாய் ஒரு முக்கியப் பிரச்னையாக உள்ளது. அந்த விஷயத்தில் பிரான்ஸ் மற்றும் ஜொ்மனி நாடுகளின் தேவையற்ற பயத்தை நாம் போக்கவேண்டும். ஆனால், அதற்குமுன் நாம் அனைவரும் ஒன்றிணைவது மிக அவசியம் என்று அவா் கூறினாா்.

Leave a Reply