சுமார் 9,000 பேருக்கு கரோனா எப்படி பரவியது என்று கண்டுபிடிக்க முடியாவிட்டால்.. அது என்ன?

20 views
1 min read
COMMUNITY_SPREAD_HAS

கரோனா தொற்று சமூகப் பரவலாகிவிட்டது

பெங்களூரு: கர்நாடகத்தில் சுமார் 9 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று எப்படி தொற்றியது என்பது கண்டுபிடிக்க முடியவில்லை என்று தெரிவித்திருக்கும் மூத்த தொற்றுநோய் நிபுணர்கள், கரோனா தொற்று சமூகப் பரவலாக மாறிவிட்டதை அரசு அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

கரோனா தொற்று சமூகப் பரவலாக மாறிவிட்டது, அதனைத் தடுக்க அரசால் எதையும் செய்யமுடியாது. தற்போது கரோனா தொற்று சமூகப் பரவலாகிவிட்டதாக அறிவித்து, அதில் இருந்து தங்களை மக்கள் எவ்வாறு காத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்று மூத்த தொற்றுநோய் நிபுணர் அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிக்கலாம்.. கிருமிநாசினி தெளிக்க துரித வாகனங்கள் சேவை: முதல்வர் தொடக்கி வைத்தார்

மக்களிடம் கரோனா தொற்று சமூகப் பரவலாக மாறிவிட்டதை உணர்த்தினால்தான் அவர்களுக்கு பொறுப்பு வரும். கரோனா தொற்று சமூகப் பரவலாகிவிட்டால், அது அரசின் தோல்வியாகக் கருதக்கூடாது. கரோனா பரவினால் அறிகுறி என்னென்ன, அறிகுறி தென்பட்டால் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைத்தான் இதன் மூலம் தெரிவிக்க வேண்டும், கேரளம் மற்றும் ஆந்திரத்தைப் போல கர்நாடகத்திலும் சமூகப் பரவலாகிவிட்டது என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பிசிஆர் கருவிகளைக் கொண்டு, பரிசோதிக்கும் போது பலருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படும். அதன் மூலம் கரோனா சமூகப் பரவலாகிவிட்டதை அறிந்து கொள்ள முடியும். எனவே அந்த சோதனையை உடனடியாக தீவிரப்படுத்த வேண்டும் என்று இந்திய பொது சுகாதாரத் துறை மையத்தின் பேராசிரியர் டாக்டர் கிரிதரா ஆர் பாபு கூறியுள்ளார்.

உடனடியாக கரோனா பணியில் ஈடுபட்டு வரும் தன்னார்வலர்கள், ரயிலில் வந்தவர்கள், கடைக்காரர்கள், தொழிற்துறையினர் என பிசிஆர் கருவிகளைக் கொண்டு பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்றும் தொற்றுநோய் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கரோனா உறுதி செய்யப்படுவோரை விரைவாக தனிமைப்படுத்துவதன் மூலம், தொற்றுப் பரவலின் வேகத்தைக் குறைக்கலாம் என்றும் மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
 

TAGS
coronavirus

Leave a Reply