செங்கல்பட்டில் 7 ஆயிரத்தை நெருங்கும் பாதிப்பு: இன்று மேலும் 191 பேருக்குத் தொற்று

20 views
1 min read

chengalpattu corona test

 

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 191 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கடந்த சில நாள்களாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மூன்றாயிரத்துக்கும் மேற்பட்டோர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். திங்கள்கிழமை நிலவரப்படி இன்று மேலும் 191 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த மாவட்டத்தில் ஒட்டுமொத்த பாதிப்பு 6,824-ஐ எட்டியுள்ளது. 

இந்தநிலையில், மாவட்டத்தில் நோய் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இ-பாஸ் இருந்தால் மட்டுமே மக்கள் மாவட்ட எல்லையை விட்டு வெளியேற அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. வீடு வீடாகச் சென்று சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

TAGS
coronavirus

Leave a Reply