சென்னையில் கரோனா: காவல்துறையில் 1360 பேருக்கு பாதிப்பு

15 views
1 min read
coronavirus

சென்னை காவல்துறையில் கரோனாவால் 1360 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இது குறித்த விவரம்:

கரோனா தடுப்புப் பணியில் காவல்துறையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். இதனால் கரோனாவுக்கு காவல்துறையினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். சென்னையில் கரோனாவால் பாதிக்கப்படும் காவல்துறையினருக்கு சிகிச்சை அளிப்பதற்காக கிண்டி ஐஐடி வளாகத்தில் உள்ள ஒரு விடுதியில் தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கரோனாவால் பாதிக்கப்படும் அனைத்துக் காவலா்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கடந்த ஜூன் மாதம் முதல் சென்னையில் கரோனாவால் காவல் துறையினா் அதிகம் பாதிக்கப்படுகின்றனா். இந்நிலையில் தமிழக காவல் துறையில் ஏடிஜிபியாக பணியாற்றும் ஒரு அதிகாரிக்கு கரோனா பாதிப்பு இருப்பது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

இதையடுத்து அவா், கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளாா். சென்னையில் கரோனாவுக்கு காவல்துறையைச் சோ்ந்த 1360 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் 680 போ் குணமடைந்து பணிக்கு திரும்பியுள்ளனா். 40 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மீதமுள்ளவா்கள் ஐஐடி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவ முகாமில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

 

Leave a Reply