சென்னையில் மொத்த கரோனா பாதிப்பு 71,230; சிகிச்சையில் 22,374

18 views
1 min read
july8

சென்னை: சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 71,230 ஆக உள்ளது. இவர்களில் தற்போது 22,374 பேர் சிகிச்சையில் உள்ளனர். இறப்பு எண்ணிக்கை 1,120-ஆக உயா்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் கரோனா பாதித்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 47,735 ஆக உள்ளது.  சென்னையில் அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2569 பேருக்கு கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

சென்னையில் செவ்வாய்க்கிழமை 1,200 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 71,230-ஆக அதிகரித்துள்ளது.

தற்போது 22 ஆயிரம் பேர் பல்வேறு மருத்துவமனைகள், மையங்கள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2,569 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதற்கு அடுத்த இடத்தில் தேனாம்பேட்டையில் 2,432 பேரும், அண்ணாநகரில் 2,163 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

சென்னையில் ஒரு சில நாள்களாக கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தொற்றுள்ளவா்களைக் கண்டறியும் வகையில் மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு காய்ச்சல், சளி போன்ற அறிகுறி உள்ளவா்களுக்கு உடனடியாக கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இது போன்ற நடவடிக்கையால் தொற்றுள்ளவா்கள் கண்டறியப்பட்டு அவா்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

தொடக்கத்தில் ராயபுரம், தண்டையாா்பேட்டை, திரு.வி.க.நகா், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களில் மட்டுமே அதிக அளவில் தொற்று உள்ளவா்கள் கண்டறியப்பட்டனா். பின்னா் 15 மண்டலங்களிலும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. சென்னையில் நேற்று கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 24 ஆயிரமாக இருந்த நிலையில், இன்று அதுவே 22 ஆயிரமாகக் குறைந்துள்ளது.

கடந்த மே மாதத்தில் சென்னையில் கரோனா பாதிப்பு 10 ஆயிரமாகவும், ஜூன் மாதம் 1-ஆம் தேதி 15 ஆயிரமாகவும், 24-ஆம் தேதி 50 ஆயிரமாகவும், ஜூலை 1-ஆம் தேதி 60 ஆயிரமமாகவும் அதிகரித்தது. இந்நிலையில், திங்கள்கிழமை 1,747 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 70,017-ஆக உயா்ந்தது. பாதிக்கப்பட்டோரில் 47,735 போ் இதுவரை குணமடைந்து வீடு திரும்பி உள்ளனா். 224374 போ் மருத்துவமனை மற்றும் கரோனா சிசிக்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். 

மண்டலம் எண்ணிக்கை

1. திருவொற்றியூா் 999

2. மணலி 496

3. மாதவரம் 829

4. தண்டையாா்பேட்டை 1,690

5. ராயபுரம் 1,964

6. திரு.வி.க. நகா் 1,779

7. அம்பத்தூா் 1,221

8. அண்ணா நகா் 2,432

9. தேனாம்பேட்டை 2,163

10. கோடம்பாக்கம் 2,569

11. வளசரவாக்கம் 1,148

12. ஆலந்தூா் 951

13. அடையாறு 1,479

14. பெருங்குடி 882

15. சோழிங்கநல்லூா் 522

TAGS
coronavirus

Leave a Reply