சென்னையில் 1,205 பேர்; பிறமாவட்டங்களில் 2,475 பேர் பாதிப்பு: மாவட்டவாரியாக நிலவரம்

18 views
1 min read
Chennai reports 1,205 cases today

கோப்புப்படம்

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, சென்னையில் இன்று 1,205 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக 3,680 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் பாதித்தோர் எண்ணிக்கை 1,30,261 ஆக உயர்ந்துள்ளது. 

இதில், சென்னையில் இன்று 1,205 பேருக்கு தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 74,969 ஆக அதிகரித்துள்ளது. சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் 2,475 பேருக்கு தொற்று உறுதி ஆகியுள்ளது.

மேலும், சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 242 பேருக்கும், திருவள்ளூரில் 219 பேருக்கும், மதுரையில் 192 பேருக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்டவாரியாக பட்டியல்: இங்கே க்ளிக் செய்யவும்..

தொடர்புடைய செய்திகள்
தமிழகத்தில் மேலும் 3,680 பேருக்கு தொற்று; பாதிப்பு 1.30 லட்சத்தைத் தாண்டியது!

TAGS
coronavirus

Leave a Reply