சேவூர் அருகே நீரில் தவறி விழுந்து பார்வை குறைபாடுள்ளவர் பலி

22 views
1 min read
murder

மர்மமான முறையில் இளைஞர் கொலை

அவிநாசி: சேவூர் அருகே ஒடை நீருக்குள் தவறி விழுந்து பார்வை குறைபாடுள்ள முதியவர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
 சேவூர் அருகே பாப்பாங்குளம் போலநாயக்கன்பாளையம் செல்லும் வழியில் ஓடையில் ஆண் சடலம் கிடப்பதாக சேவூர் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விரைந்து சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

இதில், அவர் சேவூர் அருகே கிளாகுளம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த குமரன் (52) என்பதும்,  கண் பார்வையில் குறைபாடு உள்ள இவர் பாப்பாங்குளம் அருகே எம்.ஜி.ஆர் நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு நடந்து சென்ற போது, போலநாயக்கன்பாளையத்தில் உள்ள ஓடையில் கால் தவறி விழுந்து நிச்சல் தெரியாமல் உயிரிழந்ததும் தெரிய வந்தது. 
இதையடுத்து குமரன் உடலை பிரேத பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து சேவூர் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
 

Leave a Reply