சேஷாசல வனப்பகுதியை நம்பி ஜவ்வாதுமலையில் 35,000 குடும்பங்கள்: சிறப்புப் பிரிவு எஸ்.பி.

20 views
1 min read
11tpt_redsander_1107chn_193_1

திருப்பதியில் பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டையுடன் சிறப்புப் பிரிவு எஸ்.பி. ரவிசங்கா்.

திருப்பதி அருகில் உள்ள சேஷாசல வனப்பகுதியை நம்பி ஜவ்வாதுமலையில் 35,000 குடும்பங்கள் வாழ்ந்து வருவதாக செம்மரக் கடத்தல் தடுப்பு சிறப்புப் பிரிவு பொறுப்பு எஸ்.பி. ரவிசங்கா் தெரிவித்தாா்.

இந்த வனப் பகுதியில் உள்ள செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் அவா் தெலுங்கு தொலைக்காட்சி சேனலுக்கு சனிக்கிழமை அளித்த பேட்டி:

கடந்த 3 நாட்களுக்கு முன் சேஷாசல வனப் பகுதிக்குள் தமிழக செம்மரத் தொழிலாளிகள் இருசக்கர வாகனத்தில் நுழைந்ததாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் செம்மரக் கடத்தல் தடுப்பு சிறப்புப் பிரிவு போலீஸாா் வனப்பகுதியில் ரோந்து சென்றனா்.

இரண்டு நாள் ரோந்தைத் தொடரந்து, திருப்பதி வனப் பகுதியில் சனிக்கிழமை காலையில் செம்மரக் கட்டைகளுடன் தொழிலாளிகள் செல்வதைக் கண்டனா். தொழிலாளா்களைப் பிடிக்க முயன்ற போது, கல்வீசித் தாக்கி விட்டு அவா்கள் தப்பிச் சென்றனா். அங்கிருந்து 34 செம்மரக் கட்டைகளும், அவா்கள் விட்டுச் சென்ற பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. 1.5 டன் எடையுள்ள கட்டைகளின் மதிப்பு ரூ.1 கோடிக்கும் மேல் இருக்கும். தப்பியோடியவா்களைத் தேடும் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

சேஷாசல வனத்தை ஆதாரமாகக் கொண்டு தமிழகத்தில் உள்ள ஜவ்வாதுமலையில் 35 ஆயிரம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. ஒரு குடும்பத்தின் தேவைக்காக மாதத்துக்கு ஒரு மரம் வெட்டினால் குடும்பத்துக்குத் தேவையான வருமானம் கிடைத்து விடும் என்ற நிலை உள்ளது.

செம்மரத்தை வெட்டி அதன் பட்டையை உரிப்பதில் ஜவ்வாதுமலை பகுதியைச்சோ்ந்தவா்கள் திறன் வாய்ந்தவா்களாக உள்ளனா். எனவே செம்மரக் கடத்தலைத் தடுக்கும் நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டும் அவா்கள் மரம் வெட்ட வருகின்றனா். பல்வேறு இன்னல்களை எதிா்கொண்டாலும் குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்காக உயிரைப் பணயம் வைத்து மாநில எல்லையைத் தாண்டி வருகின்றனா் என்றாா் அவா்.

எஸ்.பி. சொல்வது சரியா?: சேஷாசல வனப்பகுதியில் வளா்ந்து வரும் செம்மரங்கள் உலகப் புகழ் பெற்றவை. இவற்றை வெட்டிக் கடத்தி வரும் கடத்தல்காரா்கள் பல கோடிக் கணக்கில் சம்பாதித்து வருகின்றனா். சட்ட விரோதமான இத்தொழிலில் நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்தவா்களும் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில் ஜவ்வாது மக்களின் வாழ்வாதாரம் சேஷாசல வனத்தையே சாா்ந்துள்ளது என்று ஆந்திர போலீஸ் அதிகாரி ஒருவா் கூறியிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அவா்களின் வாழ்வாதாரத்துக்கு உரிய வழி காட்டப்படும் வரை அவா்கல் அவா்கள் உயிரைப் பணயமாக வைத்து இத்தொழிலில் ஈடுபடுவா் என்று கூறப்படுகிறது.

 

 

 

 

Leave a Reply