சோகமான நாள்களில் ஒன்று: உலகக் கோப்பை தோல்வி பற்றி ஜடேஜா!

20 views
1 min read
Jadeja

 

உலகக் கோப்பைப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராகத் தோல்வி அடைந்ததை ஒரு வருடம் கழித்து நினைவு கூர்ந்துள்ளார் ஜடேஜா.

கடந்த வருடம் மே மாதம் 23-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்ற 2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியை இங்கிலாந்து அணி வென்றது. பரபரப்பாக நடைபெற்ற இறுதிச்சுற்றில் நியூஸிலாந்து அணியை அதிக பவுண்டரிகள் அடித்ததன் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம், கிரிக்கெட் ஆட்டத்தை கண்டுபிடித்த நாடான இங்கிலாந்தின் 44 ஆண்டுகள் கனவு நனவானது.

ஜூலை மாதம் 9,10 என மழை காரணமாக இரு நாள்களில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்ட இந்தியா, போட்டியிலிருந்து வெளியேறியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா 49.3 ஓவர்களில் 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வீழ்ந்தது. 

இந்நிலையில் கடந்த வருடம் இதே நாளில் இந்திய அணி உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து வெளியேறியது பற்றி ட்வீட் செய்துள்ளார் ஜடேஜா. அவர் கூறியதாவது:

வெற்றி பெற போராடினோம். ஆனாலும் சிறிய வித்தியாசத்தில் தோல்வியடைந்தோம். சோகமான நாள்களில் ஒன்று என்று கூறியுள்ளார்.

அந்த ஆட்டத்தில் ஜடேஜா அட்டகாசமாக விளையாடி இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தினார். 59 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார். இது அவருடைய மிகச்சிறந்த ஒருநாள் ஆட்டமாக மதிப்பிடப்படுகிறது. 

கடைசியாக ஜூலை 10 அன்று நியூஸிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதிச் சுற்றில் தோனி விளையாடினார். பிறகு நீண்டகாலமாக ஓய்வில் உள்ளார். அவர் எப்போது மீண்டும் விளையாட வருவார் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

TAGS
Jadeja

Leave a Reply