ஜப்பானில் மழை: திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 44 பேர் பலி

19 views
1 min read
44 killed in japan rain

ஜப்பானின் தென்மேற்குப் பகுதியான க்யுஷுவில் தொடர் மழை மற்றும் அதன் காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 44 பேர் பலியாகினர்.

 

க்யுஷு: ஜப்பானின் தென்மேற்குப் பகுதியான க்யுஷுவில் தொடர் மழை மற்றும் அதன் காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 44 பேர் பலியாகினர்.

இதுதொடர்பாக ஜப்பானின் வானிலை ஆராய்ச்சி மையமானது துறைமுக நகரான புயிகோகா, நாகசாகி மற்றும் சகா ஆகிய பகுதிகளுக்கு பலத்த மழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது.

திங்கள் மதியம் நிலவரப்படி குமொமோட்டோ, மியாசாகி மற்றும் ககோசிமா பகுதிகளில் 1,17,000 வீடுகளில் இருந்து 2,54,000 பேர் வெளியேறி பாதுகாப்பான இடத்தில தஞ்சமடைந்துள்ளனர்.   

குமொமோட்டோ பகுதியில் மரணமடைந்த 44 பேரில் 12 பேரின் மரணமானது செஞ்சுன் மருத்துவமனையில் பதிவு செய்யபட்டுள்ளது. அங்குள்ள குமா நதியின் கரையில் பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்பட்டு உண்டான வெள்ளப்பெருக்கில் சிக்கித்தான் அத்தனை பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேரைக் காணவில்லை என்றும் அங்குள்ளோர் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply